23 டிசம்பர், 2011

விருந்து எனக்கா? இந்த சட்டைக்கா?''


முல்லா ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்; குறித்த நேரத்தில் விருந்துக்கு சென்றார். எளிமையான உடையில் இருந்ததால் வாட்ச்மேன் உள்ளே விடவில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதிக்கவில்லை.
 முல்லா திரும்பி சென்றார்; கடைக்குச் சென்று ஒரு அழகான டிப்டாப்பான உடையை வாடகைக்கு வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் விருந்துக்கு வந்தார்.இப்பொழுது வாட்ச்மேன் வாயெல்லாம் பல்லாக வாங்க வாங்க என்று வரவேற்றான்.
 உள்ளே சென்ற முல்லா விருந்தை எடுத்து தன் சட்டைப் பைக்குள் போட்டு ''சட்டையே ! இந்தா தின்னு'' என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் ''என்ன முல்லா.. என்னாச்சு உங்களுக்கு?'' என ஏளனமாக கேட்டனர்.
 முல்லா சொன்னார்; ரொம்ப நல்லா சொன்னார்: ஆமா.. முதலில் எளிமையா வந்தேன்; எதுவும் கிடைக்கல.. டிப்டாப்பா வந்தேன்; எல்லாமே கிடச்சது. அப்படின்னா இந்த விருந்து எனக்கா? இந்த சட்டைக்கா?''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...